இதுவரை முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை - முஸ்லிம் காங்கிரஸ்

திர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தா போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஆர்வமாக இருப்பதாக அக் கட்சியின் பொருளாளர் அஸ்லம் மொஹமட் சலீம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கூடி இறுதி முடிவை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -