பைசால் முகம்மது லெப்பை -காஷ்பி-
எமது நாட்டு ஆட்சியாளர்களிடம் சமூகத் தலைவர்கள் அவ்வப்போது கோரிக்கைகளை முன்வைத்து நாட்டு மக்களுக்காக அதனை பெற்றுக் கொடுத்த வரலாற்றினை நாம் அறிவோம்...
இக்கோரிக்கைகள் பொதுவானதாகவோ அல்லது குறிப்பிட்ட சமூகம் சார்ந்ததாகவோ இருந்தாலும் அவை எல்லோரும் பயன் பெறக் கூடியதாகவே இருக்கும். சில போது குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பயன்பாடாகவும் அமையும்... பிரித்தானிய ஏகாதிபத்தியதிற்கு எதிராக எம் நாட்டு மக்கள் கூட்டாக தாங்களே நாட்டினை ஆழவேண்டும் என்று கோரிக்கை வைத்தே சுதந்திரத்தினைப் பெற்றுக் கொண்டனர்... இது சகல இன மக்களும் இணைந்து பெற்ற உரிமையாகவே பார்க்கப்பட்டது... இதனால் எல்லோரும் சுதந்திர காற்றை சுவாசித்தனர்...
கால சூழலுக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் புதிய யாப்புக் களையும் இஅதனோடு இணைந்த திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி ஆட்சியினை முன்கொண்டு செல்ல உதவியாக சட்டங்களை ஆகிக்கொள்வதை காணலாம்.. இவை நாட்டுமக்களின் தேவைக்காகவே முன்வைக்கப் படுகின்றது... இது யாரால் முன்வைகப் பட்டாலும் குறித்த இனம் சார்ந்த கோரிக்கையாகப் பார்க்கப் படுவதில்லை...
இன்று நாட்டில் உள்ள சிறுபான்மைத் தலைவர்கள் ஒரு கோரிக்கையினை முன்வைத்தால் அதனை இனவாத,பிரிவினைவாத கோரிக்கையாகப் பார்கும் நிலை குறுகிய எண்ணம் கொண்டவர்களால் ஏற்படுத்தப் பட்டிருகின்றது...
இது பல்லின சமூகம் வாழும் எம் நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசல்களும், பிழையான எண்ணக் கருக்ளும் தோன்ற வழிவகுக்கும்.
1
அன்று அஷ்ரப் அவர்களால் ஒரு கட்சி தேர்தலில் பாராளுமன்ற உறுப்புருமையினை பெறுவதர்கு 12.5 வீத வாக்கு ( உரவ-ழகக pழiவெ) பெற வேண்டும் என்ற சட்டத்தினை 5 வீதமாக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட போது அது இனவாத கோரிக்கை என பார்க்கப்படவில்லை, அதனால் இன்று சிறிய இ சிறுபான்மை கட்சிகள் நன்மை பெறுகின்றன...
வடக்கு, கிழக்கு மக்களின் அதிகார பரவலாக்கனுக்கான தீர்வாக முன்வைக்கப் பட்ட மாகாண சபை முறை சகல மாகாணங்களுக்குமான ஒரு தீர்வாக கொள்ளப்பட்டதுடன் அதன் நன்மையினை பெறுகின்றன.
அந்த தீர்வுத் திட்டம் ஆரம்பத்தில் சில சலசலப்பினை ஏற்படுத்தினாலும் அதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டு பயன் பெறுகின்றனர். வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் அதன் அதிகாரங்களை முழுமையாக பெறவில்லை என்பது வேறு கதை. ஆனால் அதனை இன ரீதியான ஒரு திட்டமாக கூச்சல் இடுபவர்கள் நோக்குவதில்லை.. மாறாக அதன் அதிகாரங்களைப் பெறவே துடிக்கின்றனர்...
ஆணைக் குழுக்கள் நிறுவப்படல் வேண்டும் என்று அமைச்சர் ரஊப் ஹகீம் வேண்டி நின்ற போதும், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் வெற்றிடத்தின் போது கட்சிகளின் அதிகாரங்கள் உறுதிப்படுத்தலை அவர் கோரி நின்ற வேளையிலும் அது முஸ்லிம்களுக்கான கோரிக்கையாக அல்லது முஸ்லிம் ஒருவரால் கொண்டு வரப்பட்ட கோரிக்கையாகப் பார்க்கப்படவே இல்லை. அதன் மூலம் இன்று பல கட்சிகள் தங்களது அதிகாரங்களை உள்ளூராட்சி சபைகளில் உறுதியாக்கி நன்மை பெறுகின்றன...
இங்கு சுட்டிக்காட்டப் பட்டுள்ள சில கோரிக்கைகள் சகல இன மக்களையும் மையமாகக் கொண்டே இருக்கின்றன. அதனால் அவை இனவாத கோரிக்கையாகப் பார்க்கப் பட்டதில்லை.
2
எக்கோரிக்கையாக இருந்தாலும் அதில் பயன் பெறுபவர்களில் பெரும்பான்மை சமூகத்தின் விகிதம் குறைவாக இருக்கும் போதே இனவாதிகளால் அது பிரிவினைவாத கோரிக்கையாகப் பார்கப்படுவது இலங்கையில் இன்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
மாகாண சபைகளின் முழுமையான அதிகாரங்களை வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு அரசு வழங்க முன்வந்தால் இனவாதிகள் கூச்சல் இட முன்வரவே மாட்டார்கள் , அதனை அவர்கள் கண்டு கொள்வதும் இல்லை.
மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்க அரசு முனைந்தால் கூட அதனை பெரிய பிரச்சினையாக இனவாதிகளால் உருவாக்கப்படும் நிலயே காணப்படுகின்றது. காரணம் சிறுபான்மை இனத்தவர்களின் கரங்ககளில் அதிகாரம் சென்று விடும் என்பதும் மற்றும் அதன் மூலம் பயன் பெறுபவர்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் குறைவாக இருப்பதுமே எனலாம் .
ஐகிய இலங்கையில் இவ்வாறான கருத்துகள் வளர்வது ஆரோக்கியமாக தெரியவில்லை .ஆரம்பகால சிறுபான்மை இனத் தலைவர்கள் தங்களது சமூகத்தின் கல்வி, கலாசார செயற்பாடுகளுக்கான சில உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று இன்று நாட்டில் தமது சமயத்தினை பின்பற்றுவதற்கு வழிவகுத்துச் சென்றுள்ளனர். இன்றைய நிலை அன்று இருந்திருந்தால் பாரிய பிரச்சினையினை இலங்கை எதிர் கொண்டிருக்கும்.. இப்பின்னணியில் கரையோர மாவட்ட கோரிக்கை பற்றி பார்க்க வேண்டியுள்ளது....
கரையோர மாவட்டம் என்றால் என்ன அதன் மூலம் எதை அம்மக்கள் எதிர்பார்கின்றனர்....தாய் மொழியில் நிருவாக ரீதியாக ஏற்படும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு மாவட்ட கச்சேரி முறையே அது..
3
அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக கரையோரத்தினை அண்மித்த பிரதேசங்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் அம்பாறை நகரிலுள்ள கச்சேரிகுச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றுகின்றனர். அதன் போது மொழி தெரியாமல் மிகுந்த சிரமத்தினை எதிர்கொள்கின்றனர்.அதனை இலகுவாக்குவதற்காகவே கரையோரத்திலுள்ள கல்முனை ,சம்மாந்துறை,பொத்துவில் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி தமிழ் மொழியில் கருமமாற்றும் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவான கச்சேரி முறையினை அம்மக்கள் கேட்கின்றனர் . அக்கோரிக்கைக்கு வைத்த பெயரே கரையோர மாவட்டம்.
அவ்வாறு அமையும் இடத்து முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டமாக இலங்கையில் தடம் பதிக்கும். இங்குள்ள தமிழ் மொழியினை பேசும் மக்கள் தங்களது செயற்பாடுகளை சிரமமின்றி மேற்கொள்வர், மட்டுமல்லாமல் இம்மாவட்டத்தின் எல்லைக்குள் வாழும் சிங்கள மொழி பேசும் எமது சகோதர இனத்தவர்களின் செயற்பாடுகள் கூட சிறப்பாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் அமையும்.
இது பிரிவினைக்கான ஒரு கோரிக்கை அல்ல. அம்மக்கள் வேண்டி நிற்கும் அடிப்படை உரிமையாகும்.முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டதற்காக முஸ்லிம் மாவட்டம் என்று பெயர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.. இனப்பிரச்சினை தீர்வின் அதிகார பரவலாக்கல் அல்ல இது, வெறுமனே ஒரு நிருவாக அலகே.நாட்டின் ஏனைய நிருவாக மாவட்டம் போன்றே நிருவகிக்கப்படும். முஸ்லிம்களை பெரும்பான்மையாக் கொண்டுள்ள உள்ளு ராட்சி சபைகளை போன்ற அதிகாரத்துடன் கூடிய ஒரு ஏற்பாடே..
இக்கோரிக்கை பற்றி பலர் தெளிவு பெறாமல் இருப்பது கவலயே..தென் இலங்கை முஸ்லிம் சில தலைவர்கள் கூட பூரண அறிவினை பெறாமல் இருப்பதை காண முடிகின்றது. இனங்களுக்கிடையில்
4
புரிதலின்மையினை இது ஏற்படுத்திவிடும் போன்ற வீணான கற்பனைகள் உலாவுவதை காணலாம்..தங்களது நிலைப்பாடுகளை அவர்கள் மாற்றி பூரண விளக்கம் பெற்றுக் கொள்வது நன்மை பயர்கும்.
பெரும்பாலான பெரும்பான்மை சமூக கல்வியலாளர்கள், அரசியல் தலைவர்கள் இக்கோரிக்கையினை ஏற்றுக் கொள்கின்றனர்,அவ்வப்போது ஆட்சியில் அமரும் அரசியல் தலைவர்கள் அதை பெற்றுத் தருவதாக உறுதிப் படுத்துகின்றனர்... இருப்பினும் இனவாதிகளுக்குப் பயந்து சட்டமாக்க பின் நிற்கின்றனர்..
தேர்தல் காலங்களின் போது எத்தரப்பு இக்கோரிக்கையினை பெற்றுத்தருவதாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றதோ அத்தரப்பினையும் அதன் தலைவரையும் பாமர சிங்கள சகோதாரர்களிடம் விசம கருத்துகளை பரப்பி தேர்தல் வெற்றியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இதை விட மோசமான கருத்து என்ன வென்றால் இக்கோரிக்கையினை முன்கொண்டு செல்லும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தேர்தலின் போது குறித்த ஒரு கட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினால் கூட அவர்கள் இதனை கொடுக்கப் போகின்றார்கள், முஸ்லிமகளுக்கு இந்த நாட்டில் தனி அலகு கொடுத்து கிழக்கிஸ்தான் ஆக மாற்றப் போகின்றார்கள்,போதாகுறைக்கு அல்காயிதா அமைப்பினை வளர்க களம் அமைத்து கொடுத்து விட்டார்கள் போன்ற நச்சுக் கருத்துக்களை இனவாதிகள் பரப்பி முஸ்லிம்களை பிரிவினைக் காரர்கள், தாய் நாட்டினை காட்டிக் கொடுப்பவர்கள் என்று கூச்சலிட்டு உளரித்திரியும் கூட்டம் நாட்டில் இருப்பது அதன் ஓற்றுமையினை பாதித்துக் கொண்டே இருக்கின்றது....
5
அதிகாரத்துடன் கூடிய ஒரு மாவட்டமாக இது முஸ்லிம்களின் கரங்களில் சென்று விடும் என்றே இந்த இனவாதிகள் மக்களிடம் இக்கருத்தினை பிழையாகக் கொண்டு செல்கின்றனர்...
இதனை வென்றெடுக்க பல சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன , அவை இன்று, நாளை சட்டமாக்கப்படும் என்ற பேச்சளவில் முடிந்து போய் இருக்கின்றது...
தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளை கவர்வதற்காக ''கரையோர மாவட்டத்தினை பெற்றுத் தருவாோம் , அதனை பகிரங்கமாக யார் அறிவிக்கின்றாரோ அவருடனே பாராளுமன்றத்தில் கூட்டு அல்லது இந்த கோறிக்கையின் பிரகாரமே நாங்கள் ஒப்பந்தம் செய்து விட்டே மக்கள் சமூகம் நிற்கிறோம்'''... போன்ற வீர வசனங்களைப் பேசி மக்கள் முன் வாக்கு கேட்டு நிற்பர். மேலும் பத்திரிகையாளர் மாநாடுகளை நடாத்தி இது பற்றிய அறிக்கைகளையும் துண்டு பிரசுரங்களையும் வெளியிடுவர்........இதன் போதெல்லாம் இனவாத நெருப்பு நன்றாகவே மூட்டப்படும் அபாயம் இருக்கின்றது....
பெரும்பான்மை தலைவர்கள் தங்களது வாகுக்களை இழக்க விரும்பாது வாயே திறக்க முடியாத அளவிர்கு இனவாத கருத்து நாட்டில் விதைக்கப்பட்டிருக்கின்றது....
அண்மையில் மு.க தவிசாளர் பஷீர் சேஹுதாவூத் (மு. பா. உ) அவர்கள் இம்மாவட்ட கோறிக்கை பற்றி விட்ட அறிக்கை தூங்கிக் கொண்டிருந்த இனவாதிகளின் தூக்கத்தினை கலைத்து விட்டதை அறியலாம்....இன்று இக்கோரிக்கை மாத்திரம் அல்ல முஸ்லிம்கள் சம்பந்தமான எக்கோறிக்கையாக இருந்தாலும் அது இனவாத சாயம் பூசப்பட்டே பார்க்கப்படுகின்றது...
6
அம்பாறை மாவட்ட மக்களின் அடிப்படையுடன் கூடிய இந்த கோரிக்கையினை இனரீதியான மாவட்ட கோரிக்கையாகப் பார்க்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது, பல கட்டங்களில் இதற்கான நகர்வு முன்னெடுக்கப்படாலும் இன்றைய நிலையில் உறுதியான பாராளுமன்றம் அமையும் போது இதற்கான முயற்சியில் உரியவர்கள் ஈடுபடுவதே பொருத்தமாக இருக்கும்....
