ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர எலிகளுக்கு, கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கம்போடிய நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 எலிகளைக் கொண்ட இந்த எலிப்படையில், சில எலிகள் 1.2 கிலோ வரை எடை கொண்டுள்ளது. இவற்றை கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கொண்டு வந்திருப்பதாகவும், இவற்றிற்கு கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கம்போடிய நிலக்கண்ணிவெடி செயற்பாட்டு மையத்தின் இயக்குனர் ஹெங் ரதானா தெரிவித்துள்ளார்.
இந்த எலிகள் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் சோதனையை வெற்றிகரமாகக் கடந்தால் அவை பயன்படுத்தப்படும், இல்லையென்றால் இந்த திட்டம் உடனடியாக கைவிடப்படும் என்று ரதானா குறிப்பிட்டுள்ளார்.(ந)
