வாடகைக்குப் பெற்ற மோட்டார் வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் ஹொரண பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் வாகனத்தை கொள்வனவு செய்ய முற்பணம் வழங்கிய ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதாகியுள்ளார்.
இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்குப் பெற்றுக் கொண்ட மோட்டார் வாகனங்களை இவர் இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக, குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் வாகனங்களை விற்பனை செய்வதற்கான முற்பணமாக மாத்திரம் சந்தேகநபரால் பல்வேறு கொள்வனவாளர்களிடம் இருந்து ஒன்பது இலட்சத்து 29,000 ரூபா பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,.
அத்துடன் 29 வயதான குறித்த பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ந)
