எம்.ரீ.எம்.பாரிஸ் -
18வயதுபாடசாலைமாணவிவித்தியாவல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டவிவகாரம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்சினையோ அல்லது சமூகத்தின் பிரச்சினையோ அல்ல. மாறாக இலங்கையில் அவதானத்துக்குரிய ஒருதேசிய பிரச்சினையாகும்.
இத்தகைய ஒருகொடியபிரச்சனையை இல்லாதொழிப்பதில் ஊடக நிறுவனங்களுக்கும் அதிகபங்குண்டு. குற்றவாளிகளுக்கு உச்சகட்ட தண்டணை வழங்கப்படுவது மாத்திரமன்றி, இத்தகைவன்முறைகளை இல்லாதொழிக்கும் சமூகப் பொறுமுறைகளின் செயற்பாட்டு ரீதியான முன்னெடுப்புகளை மேலும் நெறிப்படுத்தவேண்டியும் உள்ளது.
இலங்கை அபிவிருததிக்கான ஊடகநிலையம் மற்றும் சகவாழ்வுக்கான கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தஅறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுலோகங்களையும் மக்கள் அணிவகுப்பையும் பிரசுரித்து வித்தியாவின் விவகாரத்தை அறிக்கையிடுவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளை இல்லாதொழிப்பதோ,அதுதொடர்பில் நேர் நிலையான சிந்தனைப் போக்கை உருவாக்குவதே அவ்வளவு இலகுவானதல்ல.
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழித்தல்,பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல், வன்முறை மனோபாவத்தை சமூகமயப்படுத்தும் சமூக அமைப்புக்கள் மீதுதாக்கம் செலுத்துதல் போன்ற தூர நோக்குள்ள செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருப்பதன் மூலும் ஊடகங்கள் காத்திரமானபங்களிப்பினைஆற்றமுடியும்.
இத்தகையவன் முறைகளில் பாதிப்பு தழிழ் சமுகத்தில் மாத்திரமன்றி,சிங்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்களிலும் இடம்பெறாமலில்லை.
இலங்கையில் அமுலில் உள்ள வீட்டுவன் முறை தொடர்பான சட்டத்தின் பிரயோகத் தன்மையை மறு பரிசீலனை செய்யவேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது.
சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை இல்லாதொழிப்பதில் செயற்றிறன் அற்றிருக்கும் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக முன்வைக்கப்படும் திருத்தங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசரத்தை இச்சம்பவம் உணர்த்துகின்றது.
சமய இன வித்திசாங்களுக்குஅப்பால், இலங்கையில் செயற்பாட்டுரீதியாகமந்தநிலையில் உள்ளசட்டப் பொறிமுறையின் செயற்திறனைஊக்குவிக்கஊடகங்கள் முன்வரவேண்டும்.
வித்தியாவின் கொலைவெறும் உரையாடலுக்கான சம்பவமல்ல. முன்னாள் ஜனாதிபதி உட்பட சில இனவாத அரசியல் சக்திகள் இதனை போராட்ட உணர்வைத் தூண்டுவற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தமுற்படுகின்றனர்.
சிலர் இந்தசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ் இளைஞர்களை வன்முறையில் பால் தூண்டிவிடமுற்படுகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அதிஉச்சதண்டக்கு உட்படுத்தப்படுவது எவ்வாறு முக்கியமோ, அதேஅளவுமுக்கியம் இத்தகைய சம்பவங்களைப் பயன்படுத்தி சுயநலன் பெற முற்படுபவர்களுக்கு துணைபோகாமலிருப்பதாகும்.
இத்தகைய சிலபிழையான பொருள் கோடல்கள் இந்தநாட்டில் பெண்களின் அந்தஸ்தை குறைத்து மதிப்படுவதாகும். பெண்கள் சமஉரிமையினை அசட்டைசெய்வதாகும்.
யாழ் குடாநாட்டில் வித்தியாவின் வன்கொலைச் சம்பவத்தை அடுத்து,யாழ் இளைஞர்களும் பொதுமக்களும் வீதிக்கிறங்கினர். அதன் போது,அவர்கள் சட்டத்தைமீறியசெயற்பாட்டிலும் ஈடுபட்டனர்.
ஆனால், இதனைபயங்கரவாததுடன் தொடர்படுத்துவது ஒரு இளம் யுவதியின் வன்கொலையை அசட்டைசெய்வதாகும்.
இச்சம்பவம் நடந்து இரண்டுவாரங்கள் முடிவதற்கு முன்னர் கஹவத்தையில் மக்கள் வன்முறையில் இறங்கினர்.
முன்னால் ஜனாதிபதியோ ,அவர் சார்ந்தஅரசியல் கட்சிகயே இதனை பயங்கரவாதம் எனச் சொல்ல மாட்டார்கள். நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தலைமைகள் இத்தகைய சம்பவங்களை தமதுசொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்துவதை நிதானமாக அணுகவேண்டியது ஊடகங்களின் கடமையாகும். அந்தவகையில் ஊடகநிறுவனங்கள் தூரநோக்குடன் செயற்படுவதுகட்டாயமானதாகும்.
இலங்கையில் வீட்டுவன்முறைக்கு எதிரான சட்டம் கடுமையாக இருந்தாலும் அதன் அலுலாக்கம் மந்தமாக இருப்பது கவலைக்குரியதாகும். கிராமங்கள் தோறும் உள்ளபொலிஸ்; பிரிவுகளில் பெண்களுக்கு எதிரானவன் முறைகளைத் தடுக்கும் பிரிவுகளை ஏற்படுத்திய பின்னரும் ,அதிகபட்சதண்டனைகள் சட்டத்தில் உள்ளபோதிலும் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன என்றால், இத்தகைய அமைப்புகளை தாண்டி பெண்களுக்கு எதிரானவன் முறையை நிலைபெறச் செய்யும் சக்தியொன்றுசகுத்தில் நிலைபெற்றுள்ளது என்பதேஉண்மையாகும்.
இத்தகையசக்தியுடன் போராடுவது ஊடகங்களின் கட்டாயக் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரானவன்முறையை இல்லா தொழிப்பதற்கான சட்டப் பொறிமுறையை ஊடகங்கள் கேள்விக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வித்தியாவின் வன்கொலை தோற்றுவித்துள்ளது.


