இறக்காமம் 6ஆம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கம் மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிங்களுக்கு எதிராக நடாத்தப்படும் தாக்குதலை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.
31.05.2015 ஆம் திகதி நடைபெற்ற கிராம அபிவிருத்தி சங்கத்தின் விஷேட கூட்டத்தில் இத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பல வருட காலமாக பூர்வீக குடிகளாக வாழும் சுமார் 8 லட்சம் முஸ்லிங்கள் மீதே இக் கொடூர தாக்குதல் இடம் பெற்று வருகிறது. மேலும் இம்மக்கள் எவ்வித உரிமைகளுமின்றி அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பெண்கள் சிறுவர்கள் என்று பாகுபாடு இன்றி மூர்க்கத்தனமாக தாக்கப்படுகின்றனர்.
இத்தாக்குதல்களை நிறுத்துமாறு மியன்மார் அரசுக்கு இலங்கை ஜனாதிபதி அழுத்தம் கொடுக்கும்படி கோரி மேற்படி சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இம்மகஜரில் தலைவர் ஏ.எல்.எம். இஸ்மாயில், செயலாளர் கே.எல்.சமீம் (BA) ஆகியோர் கையொப்படமிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
