அஷ்ரப். ஏ.சமத்-
மத்தலை விமான நிலையத்தினை சிறந்ததொரு விமான நிலையமாக மாற்றியமைத்து அதில் மேலும் விமானங்களையும் தரிப்பதற்கு சில சலுகைகளை வழங்கி பயிற்சிக் கல்லூரிகளையும் ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானசேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
இன்று செத்திரிபாயவில் உள்ள விமான சேவைகள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ரெஜினோல்ட் குரே மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் -
இந்த விமான நிலையத்தில் துபாய்; விமானம் மட்டுமே தற்பொழுது இறங்கி வருகின்றது. மேலும் சில விமானங்களை அங்கு இறங்குவதற்கு பல்வேறு சலுகைககள்; வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.. அத்துடன் சர்வதேச எயார் ரபிக் கொன்ரோல் (சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு) பயிற்சிக் கல்லூரியொன்றை இங்கு நிறுவுவதற்கும் பிரான்ஸ் நாட்டில் உள்ள கம்பனியிடம் பேச்சுவாத்தை மேற்கொள்ளபட்ட்டது. அந்த நாட்டு அதிகாரிகள் மேற்படி திட்டம் சம்பந்தமாக இலங்கை வரவுள்ளனர். அவ்வாறு இந்த பயிற்ச்சி நிலையம் இங்கு அமையப்பெற்றால் தெற்காசியா நாடுகளில் இலங்கையில் மத்தலை விமான நிலையம் மட்டுமே அந்தப் பயிற்சியை வழங்கும் நாடாக திகழும்.
அன்மையில் பிராண்ஸ் நாட்டின் விமானம் சம்பந்தமாக கூட்டமொன்றில் பங்குபற்றச் சென்றபோதே மேற்படி நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ரெஜினோல் குரே தெரிவித்தார்.
அத்துடன் இந்த விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் தேயிலை, மரக்கறி பொருட்களை அங்கு வைத்து ஏற்றவதற்கும். இப்பிரதேசத்தில் களஞ்சிய சாலைகள், அங்கு இறங்கும் பிரயாணிகளுக்கு தீர்வையற்ற பொருட்களை கொள்முதல் செய்யும் சர்ந்தர்ப்பமும் ஏற்படுத்தப்படும். கூடிய கொள்களன்;கள் எடை கொண்ட விமானங்கள் இங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கும் சலுகைகள் அடிப்படையில் சாந்தப்பங்கள் வழங்கப்படும்.
இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 150 விமானங்கள் ஏறி இறங்குகின்றன. ஆனால் அடுத்த சில வருடங்களுக்குள் இதனை நாம் இரட்டிப்பாக்க வேண்டும். 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கையில் வருகின்றனர். அவர்களது வசதிக்கேற்ப நாம் இதனை நவீனமயப்படுத்தல் வேண்டும். 35 வருடங்களுக்கு முன்பு இருந்த வசதிகளே இந்த விமான நிலையத்தில் உள்ளன. எமது விமானங்களும் 35 வருடங்கள் பழமைவாய்ந்த விமானங்களே உள்ளன. தற்பொழுது ஏ 380; கொண்ட விமானமொன்றை பெற்றுக்கொள்ள வெளிநாட்டு கம்பணிகளிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஜெயிக்கா 74 பில்லியன் யென் கொண்ட 2ஆம் கட்ட நவீனமயப்படுத்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்;டுள்ளது. இத்திட்டம் 2020ல்; முடிவடையும்.
சஜின் வாஸின் விமானம் ரத்மலானையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவர் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பின்படி 24 மில்லியன் ருபாவை செலுத்தியுள்ளார். ஆனால் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஏயிரோ லங்கா விமானம் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் தீயணைக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு மெசின் செயல்படாத இயந்திரம் விமான நிலையத்தில் உள்ளதாகவும். அதற்காக வருடாந்தம் காப்புறுதி மட்டும் 12 கோடி ருபாவை செலுத்துவதாகவும் ஊடகவியலாளரினால் தெரிவிக்கப்பட்டது. இதனை நான் உடனடியாக விசாரனை செய்வதாகவும் அதனை செயல்படாத இயந்திரத்தினை கொள்முதல் செய்த அதிகாரிகள் கம்பணிகள் பற்றி விசாரனை செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

