யு.எல்.எம். றியாஸ்-
இன்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் வேலை
நிறுத்தம் போராட்டமொன்று இன்று இடம்பெற்றது (25.06.2015) இன்றைய வேலைத்
நிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு நடைபெறுமென்று வைத்தியர்கள்
தெரிவித்தார்கள்.
இவ்வேலை நிறுத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள்
மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் அவசர சிகிச்சை
பிரிவு இயக்கத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் வை .பி.எம்.ஏ. அஸிஸிற்கு மேலதிகமாக
அம்பாரை பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் பீ.கே.சி.எல் ஜயசிங்கவை
மத்திய சுகாதார அமைச்சரின் செயலாளர் நியமனம் செய்துள்ளமையை கண்டித்தே
வேலை நிறுத்தம் இடம்பெற்றது.
இன்றைய வேலை நிறுத்தம் காரணமாக வைத்தியசாலையின் அனைத்து நடவடிக்கைகளும்
பாதிக்கப்பட்டிருந்தது. வெளிநோயாளிகள் பலரும் சிகிச்சை இடம்பெறாமை
காரணமாக திரும்பிச் சென்றார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கிளினிக்
நோயாளர்கள் அதிகாலை முதல் கிளினிக்கிற்காக காத்திருந்துவிட்டு
ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
இன்று மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்;தினால் பொது மக்களிடையே கருத்து
மோதல்களும் இடம்பெற்றன. தங்களுக்கு சிகிச்கை அளிக்கப்பட வேண்டுமென்று
வெளிநோயாளிகளும், கிளினிக்கிற்காக வந்தவர்களும் சத்தமிட்டுக் பேசிக்
கொண்டார்கள்.
வைத்தியர்களும், தாதிகளும், ஏனைய ஊழியர்களும் வேலை நிறுத்;தத்தில்
ஈடுபட்டதோடு, சுலோகங்களையும் காட்சிபடுத்தி இருந்தார்கள். அதில்,
'ஆஸ்பத்திரிக்குள் அரசியல் வேண்டாம்', 'எமது ஆஸ்பத்திரியை நாமே
பாதுகாப்போம்', 'வைத்தியர்கள் மீது கையை வைத்து சுட்டுக் கொள்ளாதே',
'போதும் போதும் அரசியல் பித்தலாட்டம்', 'அரசியல்வாதியே நோயாளியை பணயம்
வைக்காதே', 'ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தக் கேட்பது குற்றமா?',
'அதிகாரங்களை அறியாத அமைச்சர்களின் ஆட்டங்கள் அழிவில்தான் முடிந்துள்ளது.
நீ மட்டும் ஏன் இன்னும் உணரவில்லை' போன்ற சுலோகங்கள் காணப்பட்டன.
இன்று கொள்ளப்படும் 24 மணித்தியால வேலை நிறுத்தம் தொடர்பில் சம்மாந்துறை
அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும், அரச
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை பிராந்தியக் கிளையின்
செயலாளருமான டாக்டர் எம்.ஐ.சிராஜ் கருத்துத் தெரிவிக்கையில், ' இன்று
மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் அம்பாரை பொது வைத்தியசாலையின் வைத்திய
அத்தியட்சகர் டாக்டர் பீ.கே.சி.எல்.ஜயசிங்கவிற்கு எதிரானதொரு
நடவடிக்கையல்ல. மாறாக முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதொரு நியமனம் என்பதனை
கண்டித்தே வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்தமானது எமது
தாய் சங்கத்தின் அனுமதியுடன்தான் மேற்கொள்ளப்படுகின்றது என்பது
குறிப்பிடத்தக்கது. இது போன்ற நியமனங்கள் இனிமேலும் இடம்பெறக்
கூடாதென்பதனையும் நோக்காக் கொண்டு வேலை நிறுதத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஏற்கனவே கடமையில் உள்ள வைத்திய அத்தியட்சகர் வைத்தியசாலையை சிறப்பாக
நிர்வகித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், வைத்தியர்களும், தாதிகளும்,
ஏனைய ஊழியர்களும் அவரின் நிர்வாகத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிக்
கொண்டிருக்கும் நிலையிலும் எந்தவொரு குற்றச்சாட்டுமில்லாத நிலையிலும்
அவருக்கு மேலதிகமாக இன்னுமொரு வைத்திய அத்தியட்கரை நியமனம் செய்துள்ளமை
ஏற்றுக் கொள்ள முடியாதாகும். இது வேறு நோக்கங்களைக் கொண்டதாகவே
இருக்கின்றது. சுமூகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வைத்தியசாலையை குழப்பும்
செயல் என்றே நாம் கருதுகின்றோம்.
இது பற்றி நேற்று (24.06.2016) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்
கல்முனை பிராந்தியக் கிளையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் ஒன்று கூடி
ஆராய்ந்தோம். அது பற்றி எமது தாய் சங்கத்திற்கும் அறிவித்தோம். அதன்
பின்னர்தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மேலதிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள வைத்திய அத்தியட்சகரின் நியமனத்தினை
ரத்துச் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கப்படாத பட்சத்தில் கல்முனை
பிராந்தியத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைளிலும் வேலை நிறுத்தப்
போராட்டத்தை மேற்கொள்வதற்கும் எமது சங்கம் தீர்மானித்துள்ளது என்று
தெரிவித்தார்.
இதே வேளை, கடந்த வாரம் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார
வைத்தியசாலையின் அபிவிருத்தி பற்றியதொரு கலந்துரையாடல் மத்திய சுகாதார
அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் நடைபெற்றது. இதில், சம்மாந்துறை அன்வர்
இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வை.பி.எம்.ஏ. அஸிஸ், பள்ளிவாசல் தலைவர், ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர்
போன்றவர்கள் கலந்து கொண்டதாகவும், இதற்கான ஏற்பாடுகளை சம்மாந்துறை
தொகுதியின் ஐ.தே.கவின் அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி செய்திருந்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றன



