சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடை பெற்ற போது மூதூர் தள வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர்கள், சிற்றூழியர்கள் வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் மூதூர் பிரதேச மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனால் மூதூர் தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு மக்களின் சுகாதார செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது. எனவே கிழக்கு மாகாண சபை அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு மூதூர் தள வைத்தியசாலையின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால் தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. கிழக்கு மாகான சபையின் உறுப்பினரும், முன்னாள் கல்வி அமைச்சருமான திரு.விமல வீர திஸாநாயக்க இப் பிரேரனையை ஆமோதித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சபை அமர்வில் கலந்து கொள்ளாத காரணத்தால் மூதூர் தள வைத்தியசாலை தொடர்பான தனிநபர் பிரேரனை குறித்து விவாதம் எதிர்வரும் மாகாண சபை அமர்வின் போது நடைபெறும் என கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தெரிவித்தார்.(ந)
