மைத்திரி - மஹிந்த அரசாங்கமே தேவை - மஹிந்தவுக்கு ஆதரவான பேரணியில் பந்துல

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மாத்தறையில் இடம்பெரும் பேரணியில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை விட அதிக எண்ணிக்கையிலானோர் இம்முறை பேரணியில் ‍கலந்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டை வெற்றி பெறச் செய்யத் தேவையானது மைத்திரி - ரணில் அரசாங்கம் அல்ல எனவும், மைத்திரி - மஹிந்த அரசாங்கமே எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இங்கு மேலும் தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும் எனக் கோரி, மாத்தறையில் இன்று இடம்பெரும் பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கலந்து கொண்டோர்..
இதில் விநாயகமூர்த்தி முரளிதரன், டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, சீ.பி.ரத்நாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி, சாலித திஸாநாயக்க, மனுஷ நாணயக்கார, மஹித யாப்பா அபேவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, காமினி லொக்குகமகே, திஸ்ஸ கரலியத்த, உதித்த லொக்கு பண்டார, தேனுக விதானகமகே, சந்திரசிறி கஜதீர, சரண குணவர்த்தன, லக்ஷ்மன் வசந்த பேரேரா, டி.பி.ஏக்கநாயக்க, இந்திக பண்டாரநாயக்க, மாலினி பொன்சேகா, ஜானக வத்குபுர, நிஷாந்த முத்துஹெட்டிகம, சந்திம வீரக்கொடி, சரத்குமார குணரத்ன, பிரியங்கர ஜயரத்ன, குமார வெல்கம உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

அத்துடன் ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த பேரணியில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -