நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரித்தனர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குனகொலபெலஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஆயுதத்துடன் வந்த சம்பவம் மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி உபுல், நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவின் அதிகாரிகளை கல்லெறிந்து கொலை செய்வதாக கூறியமை தொடர்பில் நாமல் எம்.பி.யிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -