ஞானசார தேரருக்கு நன்றி சொல்ல வேண்டும் : சம்மாந்துறை மத்திய கல்லூரி நிகழ்வில் அமைச்சர் மன்சூர்

ம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் புதிதாய் அமைக்கப்பட்ட தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு கூடக் கட்டிடத் திறப்பு விழா இன்று (06) இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எச்.எம்.பாறூக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிறிஸ்னன், மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் முதன் நிலை அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நீர்ப்பாசனப் பிரதியமைச்சர் திருமதி.அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஐ.தே.கட்சி சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி, கல்வி அமைச்சின் தேசியப் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் ஏ.எல்.சிறாஜ், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம்உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாகாண அமைச்சர் மன்சூர் இங்கு உரை நிகழ்த்துகையில்;

'இன்று நாம் மற்றவர் பாராட்டுமளவிற்குக் கல்வியில் முன்னேறியிருந்தாலும், இந்த முன்னேற்றம் பல மடங்கு அதிகரித்துச் செல்ல வேண்டுமென்பதே எனது பேரவாவாகும். 

இன்று திறக்கப்பட்டுள்ள பல்தொழிநுட்ப ஆய்வு கூடத்தினை எமது மாணவர்கள் நமது கலாச்சாரப் பண்பாடுகளை சரியாகப் பேணியவர்களாகப் பயன்படுத்துவார்களாயின் நிச்சயம் நமது சமூகம் பல் துறைகளில் முன்னேற்றம் காணும் என்பதில் சந்தேகமில்லை.' 

இராஜாங்க அமைச்சர் இராதாகிறிஸ்னன் உரை நிகழ்த்துகையில்: 'ஒரு நல்ல மனிதருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை அள்ளிப்போட்டதன் மூலம் அதிமேதகு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வந்தார். மைத்திரி வந்ததால் இன்று நாட்டில் நல்லாட்சியொன்று நடைபெறுகிறது. 

இந்த நல்லாட்சியில் தமிழ்- முஸ்லிம், சிங்கள மக்கள் என்றும் ஒற்றுமையாக வாழவேண்டும். 'நான் பழைய கதைகளில் கலவரத்தின் போது கைவிடப்பட்ட சிங்களக் குழந்தைக்குப் பாலூட்டிப் பாதுகாத்த முஸ்லிம் பெண், யுத்தத்தின் போது தோல்வியடைந்த சிங்கள மன்னனைக் காப்பதற்காகத் தனது உயிரைப் பறிகொடுத்த முஸ்லிம் பெண்' போன்ற வரலாறுகளைப் படித்துள்ளேன்.

இன்று முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டுள்ளனர். முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இதற்குக்காரணம் பொது பலசேனவும், ஞானசார தேரருமே. இதற்காக இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் பொதுபலசேனவுக்கும்,ஞானசாரருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்தஒற்றுமை  என்றும் நிலைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்' எனத் தெரிவித்தார்.
                                                        ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -