வெலே சுதாவிடம் நடிகை உதயங்கி பணம் பெற்றமை கண்டுபிடிப்பு!

திரைப்பட மற்றும் நாடக நடிகை உதயந்தி குலதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதி​யை சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தனது வங்கிக் கணக்கை முடக்கும் நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி உதயங்கி குலதுங்க தாக்கல் செய்துள்ள மனு இன்று (19) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பிரபல போதை பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் உதயங்கி பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பினை பேணியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வெலே சுதாவின் தொலைபேசியை சோதனை செய்தபோது இந்த தகவல் வெளியானதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

அதன்படி, உதயங்கியின் வங்கிக் கணக்கில் நான்கு தடவைகள் தலா 1 லட்சம் என நான்கு லட்சம் ரூபா வெலே சுதாவால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் உதயங்கியின் பிறந்த தினத்திற்கு 50,000 ரூபா பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் உதயங்கி தனது சகோதரி ஒருவரின் வங்கிக் கணக்கில் 100 லட்சம் ரூபா வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் உதயங்கி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன் உதயங்கியின் வங்கிக் கணக்கு முடக்க உத்தரவை இரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். 

அதன்படி, வங்கிக் கணக்கை முடக்கி மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதியை சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம், வழக்கினை ஜூலை 3ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -