ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

லங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கும் 3ஆவது முறையாக இலங்கை நீதிமன்றம் விளக்கமறியல் நீடிப்பு செய்துள்ளது. 

கடந்த 1 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 விசைப்படகுகளையும், 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை கடந்த 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் கடந்த 12 ஆம் திகதி அவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் நீட்டிப்பு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று (19) காலை மன்னார் நீதிமன்றத்தில் 14 மீனவர்களும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்றாவது முறையாக அவர்களை ஜூலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 14 மீனவர்களும் வவுனியா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 3வது முறையாக விளக்கமறியல் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது, அவர்களது குடும்பத்தாரிடம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -