சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இடம் பெற்றது.
செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்னம், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன், வாழைச்சேனை கோறளைப்பற்று திவிநெகும பணிப்பாளர், திவிநெகும வங்கி முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கடன் தொகைக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.
செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இறுநூற்றி நாற்பத்தைந்து திவிநெகும பயனாளிகளுக்கு 20.5 மில்லியன் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
ந.குகதர்சன்,
(வாழைச்சேனை நிருபர்)







