கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவத் தலைவர்கள் -படங்கள்




எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்-

ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான மாணவத்தலைவர்களுக்கான பதவிப்பிரமாணமும் சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று கல்லூரிதிறந்தவெளியரங்கில் மிகவும் விமரிசையாக
இடம்பெற்றது.

கல்லூரி ஒழுக்காற்று சபைத் தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற மேற்படிநிகழ்வில் கல்லூரி முதல்வர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும் ,பிரதி அதிபர்களானஎம்.எஸ்.முஹம்மட் , ஏ.பி.முஜீன் , உதவி அதிபர்களான எம்.ஐ.எம்.அஸ்மி , எம்.எஸ்.அலிகான் ,எம்.எச்.நௌபர் அலி , மற்றும் ஆசிரியர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சிரேஸ்ட மாணவத் தலைவராக கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவைச் சேரந்த எம்.எப்.எம்.இபாம்அஹமட் நியமிக்கப்பட்டதுடன் அவர் உள்ளிட்ட மாணவத் தலைவர்கள் சத்தியப் பிரமாணம்செய்ததுடன் அதிதிகளினால் மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களும் சூட்டப்பட்டன.
மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வினை முன்னாள் ஒழுக்காற்று சபைத்தலைவரும் , தரம் 6 பகுதித் தலைருமான எம்.எஸ்.எம்.நுபைஸ் நெறிப்படுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -