கல்முனை பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கும் நிகழ்வும், அடிக்கல் நடும் நிகழ்வும் நாளை 08ம் திகதி திங்கட்கிழமை காலை முதல் இடம்பெறவுள்ளது.
கல்முனை ஸாஹிரா கல்லூhயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் காலை 8.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதுடன் கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் கல்லூhயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இதே தினம் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் உலக வங்கியின் நிதி உதவியில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இப்பாடசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அஷ்ரஃப் ஞாபகார்த்த கூட்ட மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வும் காலை 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இத்திறப்பு விழா நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர அபிவிருத்தி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.ச
ஹாசிப் யாஸீன்-
(கல்முனை நிருபர்)