கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் துஆ பிரார்த்தனையும் நினைவேந்தல் நிகழ்வும் நினைவில் வாழும் இமயம் நூல் வெளியீட்டு விழாவும்
கல்முனை சாஹிறா கல்லூரியின் நீண்ட காலமாக அதிபராக கடமையாற்றி இறுதியாக முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றி மக்களுக்கு பெரும் சேவையாற்றிய மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் 40வது நாளை முன்னிட்டு துஆ பிரார்த்தனையும் நினைவேந்தல் நிகழ்வும் 'நினைவில் வாழும் இமயம்' எனும் நூல் வெளியீட்டு விழாவும், கல்முனை சாஹிறா கல்லூரின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம் பிரதேச பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், பிரபல சட்டத்தரணி சபானா ஜுனைடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய சபானா ஜுனைடீன்;
மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் முஸ்லிம் கமூகத்திற்கு மட்டும் அன்றி நாட்டில் வாழும் முழு சமூகத்தினருக்கும் கல்வி துறையில் பெரும் பணியாற்றியுள்ளார். அவரின் சேவையினால் இன்று 1000 கணக்கான கல்வி அதிகாரிகள் நமது சமூகத்திற்கு மத்தியில் காணப்படுகின்றனர் என தெரிவித்தார்.
இதன் போது ஓய்வு பெற்ற மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. ஷாப்டீன், தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ், ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ஏ.சி.எம். ஸுபைர், ஓய்வு பெற்ற ஆசிரிய கல்லூரியின் அதிபர் நெய்னா முஹம்மது, வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காஸீம், டாக்டர் எ.எல்.கே. தாஸிம், அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எம். பாஹிம், சாஹிறா கல்லூரியின் பழைய மாணவர் ஏ.சி. சைபுடீன் உட்பட கல்விமான்களும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





