ஜுனைட்.எம்.பஹ்த்-
றமழானை வரவேற்போம் விஷேட நிகழ்வு எதிர்வரும் றமழானை முன்னிட்டு, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ‘றமழானை வரவேற்போம்’ எனும் கருப்பொருளில் விஷேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 4ம் திகதி வியாழக்கிழமை மாலை 6.45 முதல் 9.00 மணி வரை இல 77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இவ்விஷேட நிகழ்வில் பின்வரும் விரிவுரைகள் இடம்பெற இருக்கின்றன.
1.‘உள்ளங்களை உயிர் வாழ வைக்கும் அல்குர்ஆன்’ – ஜாமிஆ நளீமிய்யா சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் APM அப்பாஸ் (நளீமி),
2. ‘நோன்பு தரும் ஆரோக்கியம்’ – வைத்தியர் MSM பாஇக்,
3.‘றமழானில் உச்ச பயன் பெறுவது எப்படி?’ – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தர்பிய்யா பயிற்றுனர் – உஸ்தாத் RM இப்ராஹிம், மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் .
தொடர்புகளுக்கு: 0766529128
