க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையிலிருந்து சாய்ந்த‌ம‌ருது பிரிந்துசெல்வதால் இன முரண்பாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் உருவாகும்-










க‌
ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையிலிருந்து சாய்ந்த‌ம‌ருது பிரிந்து த‌னி ந‌க‌ர‌ ச‌பையாக‌ இருப்ப‌தால் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பைக்கான‌ வ‌ட்டார‌ங்க‌ள் அதிக‌ரிக்க‌ப்ப‌டுவ‌துட‌ன் க‌ல்முனை 12ம் வ‌ட்டார‌ம் இரு உறுப்பின‌ர் வ‌ட்டார‌ம் என்ப‌தன் கார‌ண‌மாக‌ தொட‌ர்ச்சியாக‌ இன‌ முர‌ண்பாடு ஏற்ப‌டுவ‌தால் அதை அது இர‌ண்டு வ‌ட்டார‌ங்க‌ளாக‌ மாற்றும் ப‌டி ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ், பொதுநிர்வாக‌ உள்நாட்டு மாகாண‌ அமைச்ச‌ரை வேண்டிக்கொண்டுள்ள‌து.

இது ப‌ற்றி ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் மு. முஸ்ன‌த் அவ‌ர்க‌ளால் பொதுநிர்வாக, உள்நாட்டு மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு அனுப்பிவைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ க‌டித‌த்தில் மேலும் குறிப்பிட்டிருப்ப‌தாவ‌து,

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து தனி நகர சபையாக இயங்கிவருவதன் காரணமாக, கல்முனை மாநகர சபைக்கான வட்டாரங்களின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போதைய கல்முனை 12ஆம் வட்டாரம் இரு உறுப்பினர் வட்டாரமாக அமைந்துள்ளதால், தொடர்ச்சியாக இன முரண்பாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் உருவாகி வருகின்றன. மக்கள் பிரதிநிதித்துவம் சமநிலையாக அமையவும், எதிர்கால முரண்பாடுகளை தவிர்க்கவும், குறித்த வட்டாரத்தை இரு தனி வட்டாரங்களாகப் பிரிப்பது அவசியமாகியுள்ளது.

க‌ட‌ந்த‌ உள்ளூராட்சி தேர்த‌லில் இந்த‌ வ‌ட்டார‌த்தை கைப்ப‌ற்றுவ‌த‌ற்காக‌ த‌மிழ் க‌ட்சிக‌ளும் முஸ்லிம் க‌ட்சிக‌ளும் மாறி மாறி இன‌வாத‌த்தையும் இன‌ முர‌ண்பாட்டையும் ஏற்ப‌டுத்தின‌.

எனவே, எதிர் கால‌த்தில் கல்முனை 12ஆம் வட்டாரத்தை மக்கள் தொகை மற்றும் நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு இரு தனி வட்டாரங்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வ‌த‌ன் மூல‌ம் இன‌ங்க‌ளுக்கிடையில் சௌஜ‌ன்ய‌த்தை ஏற்ப‌டுத்த‌ முடியும் என்ப‌தால் இது விட‌ய‌த்தை க‌வ‌ன‌மெடுக்கும்ப‌டி ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அமைச்ச‌ரிட‌ம் அன்புடன் கோருகிறது.
இவ்விடயத்தில் சாதகமான மற்றும் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.

மு. முஸ்ன‌த்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்
18.5.2026
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :