நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தனது இளைஞர் அணியை உருவாக்குவது தொடர்பாக ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்றை கடந்த 30.05.2015 அன்று காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பில் நடாத்தியது.
பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி மற்றும் ஷரீஆத் துறை போன்றவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இளைஞர்கள் என பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இவர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி, புத்தளம், அனுராதபுரம், வன்னி, கொழும்பு மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்தனர்.
இதன்போது NFGGயின் இளைஞர் அணியின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத், தலைமைத்துவ சபை உறுப்பினர் சஹோதரர் ஹனான் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

