நடிகர் அருள்நிதிக்கு டும் டும் டும்…!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு – மோகனாம்பாள் ஆகியோரின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும் நீதிபதி என்.கண்ணதாசன் – எஸ்.கே.கீதா ஆகியோரின் மகள் கீர்த்தனாவுக்கும் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது.

தி.மு.க.தலைவர் கருணாநிதி முன்னிலையில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கிஅருள்நிதி – கீர்த்தனா திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் அருள்நிதி– கீர்த்தனா ஆகியோர் கருணாநிதி கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள்மீது மலர் தூவி கருணாநிதி வாழ்த்தினார்.

மணவிழாவுக்கு வந்தவர்களை கலைஞர் அரங்க வளாக வாசலில் தி.மு.க. பொருளாளர்மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, முரசொலி செல்வம், இயக்குனர் அமிர்தம், டி.ஆர்.பாலு ஆகியோர் வரவேற்றனர். விழாவில் முன்னாள் மத்திய மந்திரிமு.க.அழகிரி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள்பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

நேற்றிரவுநடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ரோசையா, பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, சிவகுமார், விஷால், விவேக், குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டுமணமக்களை வாழ்த்தினர்.(ந)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -