ந.குகதர்சன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட முதியோர் சங்கம், பிரதேச மட்ட முதியோர் சங்கம் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகிகள் 50 பேருக்கு முதியோர் உரிமைகள், மனித உரிமைகள், உணவுப் பழக்கமும் போசாக்கும் மற்றும் வயோதிபத்தினை எதிர்கொள்ளல் எனும் விடயங்கள் அடங்கலான பயிற்சியானது மாவட்ட சமூகசேவை அலுவலக மண்டபத்தில் நடாத்தப்பட்டது.மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டு முதியோரின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்துக்கு வழிகாட்டல் மற்றும் மாவட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக முதியோர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடி விளக்கமளித்தார்.
பயிற்சி நெறியில் கிழக்குப் பல்கலைக் கழக மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர்.மு.அருளானந்தம், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏஅஸீஸ், கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த உளவளதுணையாளர் எஸ்.ஸ்ரீதரன், வளவாளர்ளாக கலந்து கொண்டனர்.
இப் பயிற்சியில் இலகுபடுத்தினர்களாக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.மதுசூதனன், ப.விஸ்வகோகிலன் மற்றும் மாவட்ட அலுவலக சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்களும் செயற்பட்டனர்.


