நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

‘பம்பரக் கண்ணாலே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஆர்த்தி அகர்வால். இப்படத்தில் இவர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007-ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார்.

இந்நிலையில் இவர் அமெரிக்காவில் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 31. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் திடீர் என்று இன்று இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -