நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் அதிகாரிகள் அறுவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி திஸ்ஸமஹராம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.எச்.ஜனக குமார, பண்டாரவளை குற்ற விசாரணைப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
மொரவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.எம்.தம்மிக, திஸ்ஸமஹராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளதோடு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.ஏ.டீ.எஸ்.அதரகம, மொரவக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொஸ்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.ஆர்.சுனில், பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
லுணுகம்வேகர பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.ஐ.கமகே, கொஸ்கம பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் பண்டாரவளை பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் எச்.ஜீ.திஸாநாயக்க, லுணுகம்வேகேர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
