நல்லது நடக்கவேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசத்தை தடுக்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி செயற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், கடந்த ஜனவரி 8ஆம் திகதி தோல்விக்கண்டபோதும் மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் புதிய அரசாங்கம் அமைக்கும் மஹிந்தவின் திட்டத்தை தோற்கடித்து ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலில் வெற்றிப்பெறும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட நல்லாட்சி என்ற கொள்கையை பொதுத்தேர்தலிலும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
