சேலம் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து!

சேலம்,சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளிக்கடையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நான்காவது மாடியில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

ஜன்னல் வழியாக தீ கொளுந்து விட்டு எரிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். 

ஜவுளிக்கடை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிபத்தில் அறையில் இருந்த ஏசி, கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
t.o.c
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -