ஏறாவூரில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று பொலிஸாரினால் முற்றுகை!

எஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு - ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி நல்லதம்பியார் வீதியில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று ஏறாவூர்ப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. 

அங்கிருந்த 360 லீட்டர் கள்ளு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வி.ஆர் தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார். 

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஈஸ்ட் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்பட்டு கள்ளு உற்பத்தி நடைபெற்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -