யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் அழகியற் பாடநெறிகள் மீண்டும் ஆரம்பம்!

பாரூக் சிகான் -
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியற்துறை பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கடந்த சிலவருடங்களாக அழகியற்துறை பாடநெறிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்லூரிச் சமூகம் செயலாளர் நாயகத்திடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது. 

அதனடிப்படையில் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடியதன் பயனாக இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியத்துறை பாடநெறிகள் இவ்வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் குறித்த பாடநெறிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த காரணத்தினால் கடந்த காலங்களில் மாணவர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 


இந்நிலையில் மீண்டும் இப் பாடநெறிகள் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்; முயற்சியின் பயனாக ஆரம்பிக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனடிப்படையில் அழகியற்துறை பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முழுமையான முயற்சியையும் பங்களிப்பையும் வழங்கிய செயலாளர் நாயகத்திற்கு கல்லூரி சமூகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை நோக்கத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -