(சம்மாந்துறை) 101 பயனாளிகளுக்கும் இலவச நீர் இணைப்பு வழங்கும் திட்டம்!

அபூ-இன்ஸாப்-

சாதி, மத பிரதேசவாதம் பாராமல் அரசியல் பேதங்களின்றி சேவையாற்றக்கூடிய மனிதநோயமும் நோரிய சிந்தனையும் இறைபக்தியும் உடைய உன்மையான தொண்டர்களே சிறந்த தலைவர்கள் என பேற்றப்படுவர் என சம்மாந்துறை சமூக நல மேன்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் ஐ.எல். நாஸர் தெரிவித்தார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான அப்துல் றவூப் ஹக்கீம் அவர்களின் விருப்பத்தின் பேரில் தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அதிகார சபையின் தலைவர் பொறியிலாளர் கே ஏ அன்சார் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 101 பயனாளிகளுக்கும் இலவச நீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைப்;பதற்கான பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில்; ஐ.எல்.நாஸர் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்

இவ்வாறான ஒரு நிகழ்வு இன்று நடைபெறுவது என்பது தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அதிகார சபையின் தலைவர் பொறியிலாளர் கே.ஏ.அன்சார் அவர்களின் மனிதநேயமும் இறைபக்தியும் கொண்ட சேவையின் வெளிப்பாடே ஆகும்.

இப்பிரதேச மக்களுக்கான ஆரம்பக்கட்ட சேவையாகவே நாம் இதனை கருதவேண்டும். இன, மத மற்றும் கட்சி பேதமின்றி நாம் இந்த பயனைப்பெறும் சந்தர்பம் கிட்டியுள்ளது. சம்மாந்துறை நகரம் நீண்ட காலமாக தண்ணீர் பிரச்சினை உள்ள நகரம் இந்தப் பிரச்சினைக்கு மிகவிரைவில் அமைச்சர் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படவிருக்கின்றது.

அத்துடன் இங்கு பிரதம அதீதியாக வருகைதந்துள்ள தேசிய நீர் வழங்கல் கொழும்புத்திட்ட மேம்பாட்டு பணிப்பாளர் பொறியியலாளர் றசீட் அவர்கள் இவ்வூரின் நீர்பிரச்சினைகள் தொடர்பாக பலதரப்பட்ட முயற்சிகளை தனது பல்கலைக் கழக கல்வி பயிலும் காலத்திலிருந்தே மேற்கொண்டவர் அவர் இந்த விழாவில் கலந்து கொள்வது என்பது இவ்விடத்துக்கு பொருத்தமானதாகும் எனவும் தெரிவித்தார்.

எனவே இவ்வாறு மக்களின் தேவைக்கு ஏற்றாவாறு பகுபாடு பிரதேச வாதம்பாராமல் இறைவனுக்காக சேவை புரிகின்ற இவ்வாறான தலைவர்கள் மக்களின் உன்மையான தொண்டர்கள் ஆவார்கள். இவர்ககளுக்காக பிரத்திப்பபோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -