ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு!

ந.குகதர்சன்-
வாழைச்சேனை ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவம் திங்கட்கிழமை நடைபெற்றது.

கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான சடங்கு உற்சவம் பதினொரு நாட்கள் இரவு பகல் பூசைகள் இடம்பெற்று திங்கட்கிழமை தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

இத்தீமிப்பு உற்சவத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர் முதல் பெரியோர் வரை கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர்.

இதன்போது தீர்த்தமாடும் நிகழ்வு ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கல்குடா வீதி வழியாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் சென்று பின்னர் வாழைச்சேனை இந்து சமூத்திரத்தில் தீர்த்தமாடும் உற்சவம் நடைபெற்றது.

இச்சடங்கு கால பூசைகள் யாவும் ஆலய பிரதம பூசகர் சிவஸ்ரீ.எஸ்.சண்முகம் ஐயர் தலைமையில் நடைபெற்றது.

பூசைகள் முடிவுற்றதும் இறுதியில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.(ந)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -