பாலமுனை: பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி!

எஸ்.எம்.அஜூஹான்-

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு (17) பாலமுனையில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரீப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பள்ளிவாசல் தலைவர்களிடம் காசோலையை வழங்கி வைத்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் நெறிப்படுத்தலில் மத்திய குழு கடந்த நான்கு வருடங்களாக பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -