மைத்திரி இப்படி செய்வது நல்லதா (காட்டிக்கொடுக்கலாமா?)

டந்த ஜனாதிபதி தேர்தலின் போது மிகவும் நெருங்கி அரசியல் புரிந்துணர்வுடன் செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடையே தற்போது பாரிய அளவிலான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் புரிந்துணர்வுடைய கூட்டணி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர்களுக்கிடையில், இது தொடர்பில் முக்கிய காரணமாக இருப்பது ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் அறிவுரைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையாக அடிபணிவதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு அடிபணிவதின் முடிவாக, தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினருடன் ஜனாதிபதி அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருப்பதனால், சந்திரிக்கா மற்றும் ரணில் மிகவும் அமைதியற்ற நிலைமையில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்ச ஆட்சியின் போது பாரிய அளவில் மக்களின் பணத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு முக்கியமான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் கூட்டணியின் பிரதிபலன் என சந்தேகிக்கப்படுகின்றது.

அவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எதிர்வரும் நாட்களில் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றது.

இவ்வாறான சிக்கல்களின் முடிவாக ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் நிதி அமைச்சில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தமையும், அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்காலத்தில் மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ஒரே மேடையில் ஏறவுள்ளதாகவும், அதற்காக நியமிக்கப்பட்ட குழு ஊடக கண்காட்சியை மாத்திரம் நிகழ்த்தியதோடு, அவர்களை இணைப்பதற்கான உண்மையான வேலைகளை அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் தற்போது வரையில் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -