சர்வதிகார மஹிந்தவுக்கு இடம் கொடுக்கப்போவதில்லை - விக்கிரமபாகு கருணாரட்ண

ஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியல் வருவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.

அதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ எந்த வழிமுறைகளுடாகவும் அரசியலுக்குள் வர வழைக்க முடியாது என கருத்துக் கூறியிருக்கின்றார். அதற்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றோம். மிகவும் சர்வாதிகாரமான போக்கு கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு இடமளிக்க கூடாது. இந்த நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரிடமும் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.

20வது திருத்தத்தினை ஆதரிக்கும் அதேநேரம், விகிதாரசார முறைநீக்கப்படலாம், இதுவரை ஜனநாயக ரீதியாக அனுபவித்தவற்றினை நாம் இழப்பதாகவோ, அல்லது விட்டுக் கொடுப்பதாகவோ அமையாது.

பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்து விட்டது.பாராளுமன்றம் கலைக்கபட்டு, பொதுத் தேர்தல் நடைபெற்றால், அந்த தேர்தலை எதிர்கொள்ளவும், அடுத்த அரசாங்கத்தினை உருவாக்கவும் தொடர்ந்தும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார போக்கினை ஒழித்துக் கட்டுவதற்காகவே, நவசமாஜக்கட்சி ஏனைய அனைத்து கட்சியுடன் இணைந்து செயலாற்றி மைத்திரிபால சிறிசேனாவை ஆட்சிக்கு கொண்டு வந்தது.

தேசிய நிறைவேற்று குழுவில் அங்கம் வகித்த போதும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான முழு அழுத்தங்களையும் கொடுத்துள்ளோம்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதாவது, காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விடுதலை, உள்ளிட்ட பல விடயங்களை அரசு செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கு நவசமாஜக்கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதிலளிக்கையில், குறித்த விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தார்கள். அதை நன்கு அறிவோம்.

வலி.வடக்கு பகுதியில் உள்ள காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்திருக்கின்றார்கள். அந்த நிலமை மாறி மக்களுக்கு அந்த காணிகள் கையளிக்கப்பட வேண்டும்.

யாழ்.மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதற்கு எதிராகவும் தாம் பல கருத்துக்களை முன்வைத்து, இராணுவத்தினரை வைத்திருப்பதானது யாழ்.மாவட்டத்தில் மட்டும் அரசாங்கம் பாராபட்சம் காட்டுவதாக வலியுறுத்தியுள்ளோம்.

இராணுவத்தினருக்கு காணிகள் தேவையாக இருந்தால், அந்த பிரதேசத்தில் வேறு காணிகளை இராணுவத்தினருக்கு வழங்க முடியும்.

வடமாகாண தலைவர்களுடன் கலந்துரையாடி இராணுவத்தினருக்கு தேவையான காணிகளை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட வேண்டுமென்பதனை தேசிய நிறைவேற்று அதிகார சபையில் வலியுறுத்தி வந்துள்ளோம்.

இலங்கையை பொறுத்தவரையில், இதர அமைப்புக்களின் செயற்பாடுகள் அவசியம் என்று கருதுகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு விரும்பும் அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அழுத்தங்களை கொடுத்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ள முடியமென நினைக்கின்றோம்.

அங்கும் இங்கும் சில காணிகளை மக்களுக்கு கையளித்து விட்டார்கள். ஏனைய மிகப்பாரிய விவசாய காணிகளை இராணுவத்தினர் கையப்படுத்தி வைத்துக்கொண்டு, விவசாயம் செய்வதுடன், அந்த பொருட்களைவிற்பனை செய்கின்றார்கள்.

இராணுவத்தினருக்கு காணிகள் தேவைப்பட்டால், அந்த காணிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியல் நிலமையுடனான திட்டத்தினை முன்மொழிந்து அந்த காணிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர மக்களின் காணிகளை பெற்றுக்கொள்ள கூடாது.

இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகளை கையளிக்குமாறு அரசாங்கத்திடம் கூறியிருந்தாலும் அந்த செயற்பாடுகள் மிக மெதுவாக நடைபெறுகின்றன.

312 அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட பிரச்சினையில் கைதுசெய்யப்படவில்லை. அரசியல் சூழ்நிலை காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ச்சியாக அந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரையில் சுமார் 1 லட்சம் பேர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை கண்டு பிடிப்பதற்கான பொறுப்புக்களை அரசாங்கம் கூற வேண்டும்’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -