தமிழகத்தின் திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 42). இவர் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
கவுன்சிலர் கருணாகரனுக்கும் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவரை இரகசிய திருமணம் செய்து கொண்ட கருணாகரன் அவருடன் திண்டுக்கல் நாகல் நகரில் இரண்டு ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கவுன்சிலர், அந்த பெண்ணை சந்திக்காமல் இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த பெண், சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பினார். மேலும் தன்னிடம் ரூ.15 இலட்சம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து டி.எஸ்.பி. வனிதா, திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கவுன்சிலர் கருணாகரனிடம் விசாரித்து வருகின்றனர்.
(மாலை மலர்)
