சினேகாவின் வளைகாப்பு…!

டிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 12-ந் திகதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப்பின் சினேகாவும், பிரசன்னாவும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள். சினேகா இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

7 மாத கர்ப்பிணியான சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது. சினேகாவின் தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி, பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புவனேஸ்வரி மற்றும் நெருங்கிய உறவினர்கள், வளைகாப்பில் கலந்துகொண்டார்கள். நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், டைரக்டர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் வளைகாப்புக்கு வந்து சினேகா-பிரசன்னா ஜோடியை வாழ்த்தினார்கள்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -