சாய்ந்தமருதின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற அப்பிராந்திய மக்களின் கோரிக்கையை, கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்கள் ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களிடம் வேண்டிக்கொண்டதற்கினங்க அமைச்சர் அவர்களால் முதற்கட்ட வேலைகளுக்காக சுமார் 30 மில்லியல் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2015-05-15 முதல்அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குனரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி அவர்களது நேரடி கண்காணிப்பில் நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த அபிவிருத்திப்பணிகளின் முன்னேற்றங்களை பார்வையிடுவதர்க்காகவும் இரண்டாம் கட்ட பணிகளை திட்டமிடுவதற்காகவும் காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான் அவர்களது தலைமையில் உயர்மட்ட குழு 2015-06-07ல் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்திருந்தது.
இக்குழுவில் காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குனரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி மற்றும் பொறியலாளர்களான அவ்ப் மக்பூல்,சீ.வி.அமரசிங்க,எல்றோய் பெர்னாண்டோ உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வருகைதந்திருந்தனர்.
தோணா அபிவிருத்தியின் முன்னேற்றங்களை பார்வையிட்ட குழுவின் தலைவரான காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான் அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்; இரண்டாம் கட்ட அபிவிருத்திப்பணிகளை திட்டமிடுவதற்காகவே தாங்கள் இங்கு வருகை தந்துள்ளதாகவும் அதிக பணத்தை செலவுசெய்து மேற்கொள்ளப்படும் இவ்அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு பிரயோசனமான முறையில் ஆக்கிக்கொள்வதில் இப்பிராந்திய மக்களும் கல்முனை மாநகரசபையும் தங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், தங்களால் சுத்தப்படுத்தப்பட்டுவரும் பிரதேசங்களில் மீண்டும் கழிவுகள் வீசப்படுவதாகவும் அவ்வாறன நிலையை தோணா அபிவிருத்தியில் அக்கறைகொள்ளும் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்றும் தோணாவை சுத்தமாக பேணுவது தொடர்பில் எதிர்காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழவுகளை நடாத்தவுள்ளதாகவும், கல்முனை மாநகரசபை கோரும்பட்சத்தில் அவர்களுக்கு தோணாவை சுத்திகரிப்பது தொடர்பான பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தோணாவின் அருகில் வசிப்போரும், பள்ளிவாசல், சுகாதாரத்துறையினர் மற்றும் ஆர்வளைகளும் குறித்த தோணாவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொன்டார்.


