ஏறாவூர் போக்குவரத்துச் சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியிலிருந்து தங்க மாலையொன்று கண்டெடுப்பு!

ஏஎம் றிகாஸ்-
றாவூர் போக்குவரத்துச் சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியிலிருந்து தங்க மாலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சாலை முகாமையாளர் எம்எஸ்.அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

இந்த மாலையின் உரிமையாளர் ஏறாவூர் போக்குவரத்துச் சாலைக்கு வருகைதந்து அந்த மாலையின் அடையாளத்தை உறுதிப்படுத்தி மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு- வாழைச்சேனை குறுந்தூர சேவையில் ஈடுபட்ட பஸ் வண்டியிலிருந்து இந்த மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கவனிப்பாரற்றுக் கிடந்த இந்த மாலையினை கண்டெடுத்து சாலையில் ஒப்படைத்த அந்த பஸ் நடாத்துனரின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -