முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40 பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு..

அப்துல் அஸீஸ்​

அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (14) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மத்திய குழு ஆலோசகராக பணியாற்றிய, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரான எம்.ஏ.சி.முகமட் ரியாஸ்யின் தலைமையில் 40பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்து கொண்டனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரான எம்.ஏ.சி.முகமட் ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகள் பொறுப்பாளரும் - கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான அன்வர் முஸ்தபா , புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினதும் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் கல்முனை தொகுதி இணைப்பாளர் எ.எல்.எம்.அஸ்ரப் உட்பட அட்டாளைச்சேனை பிரதேச கட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -