ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மட்டக்குளி தாருள் தக்வா ஹிபுழ் குர்ஆன் மத்ரஸாவின் 2014ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா மத்ரஸாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாபிஸ் அல்-ஹாரி முஹமட் யுஸ்ரி சுபைர் தலைமையில் கொழும்பு பிஷப் கல்லூரி மண்டபத்தில் நேற்று (31) ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக சவுதி அரேபியவின் மார்க்க அறிஞரும், பிரபல சமுக சேவையாளருமான பொறியியலாளர் அஷ்ஷெய்க் முஸாபப் முஹம்மட் அல்-கத்தானியும், கௌரவ அதிதியா அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் தேசமான்ய அஷ்ஷெய்க் மௌலவி. எம்.எஸ்.எம்.தாஸிம், மத்ரஸாவின் இணைப்பாளரும், பெண்கள் பிரிவுப் பொறுப்பாளருமான அல்-ஹாரியா றின்ஸா அன்ஸார் யுஸ்ரி, மத்ரஸாவின் அதிபர் அல்-ஹாபிஸ் அல்-ஹாரி முஹம்மட் றிப்றாஸ் றாஸிக் மற்றும் ஆசிரியர்கள், ஒஸ்தாத்மார்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மத்ரஸாவின் பாடவிதானத்துடன் தொடர்புடைய குர்ஆண் மனனம் உட்பட அனைத்துப் போட்டிகளிலும் பங்கபற்றி வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மேற்படி மத்ரஸாவில் குர்ஆனை முழுதும் மனனம் செய்து கொண்ட உமர் பஷீர் என்ற மாணவனின் குர்ஆன் தமாம் நிகழ்வும் சபையில் விஷேடமாக இடம் பெற்றது.
பிரதம அதிதிக்கும், கௌரவ அதிதிக்கும் மத்ரஸாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாபிஸ் அல்-ஹாரி முஹமட் யுஸ்ரி சுபைர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.












