அஸ்ரப் ஏ சமத்-
ராகம வைத்திய சாலையில் 90 வீதமான பௌத்த மக்களே சுகாதார சேவையைப் பெறுகின்றனர். ஆனால் இவ் வைத்தியசாலைக்கு கடந்த 10 வருடங்களாக முஸ்லீம் தனவந்தர்கள் உதவி வருகின்றனர். இதற்கு மூல காரணம் இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராக உள்ள கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகளின் செயலாளர் டொக்டர் முபாரக் காரண கர்த்தாவாகும்.
அவர் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து உரிய வார்டுகளுக்குச் சென்று வார்டுகளின் பிரதான தாதிமார்களை அனுகி அவர்கள் கூறும் குறைகளை கேட்டறிந்து தமது மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் தனவந்தர்கள், மற்றும் பெசன் பக் அல்லது ஏதாவது ஒரு வகையில் முஸ்லீம் வர்த்தக அனுசரனையாளர்களை அனுகி இந்த சேவையை இந்த வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கின்றார்.
அவர் இறுதி முச்சிஇருக்கும் வரை இவ்வைத்தியசாலைக்கு செய்ய வேண்டிய உதவியை செய்வதாக தெரிவிக்கின்றார். ஆனால் அவர் பணம் படைத்தவரும் அல்ல, அவர் பஸ்களில் ஏறி இறங்கி இங்கு வருகின்றார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றார். என வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் குருவிட்ட தேரோ மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மேல் மாகாணசபை உறுப்பிணர் பாயிஸ், வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டா யு.எம்.எம். சமரணயாக்க, பிரதிப்பணிப்பளர் டொக்டர் தௌபீக், டொக்டர் முபாரக் ஆகியோறும் கலந்து கொன்டு உரையாற்றினார்கள். இந் நிகழ்வில் 17 ஆம் வாட்டுக்காக வர்ணம் பூசுதல் மற்றும் சுவர்க்கடிகாரங்கள், கேட்டுன்கள் முபாரக்கினால் உரிய பிரதான தாதியர்களிடம் இங்கு கையளிக்கப்பட்டது.



