மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றம் / புதிய ஆசிரியர் நியமனங்கள் பெறுவது தொடர்பாக (கடிதம்)

கௌரவ அல்ஹாஜ் ஹாபீஸ் ZA நஸீர் அகமட்; (Eng) MPC,
முதலமைச்சர்,
கிழக்கு மாகாண சபை,
பிரதித் தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ்.


ஐயா,

மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றம்/ புதிய ஆசிரியர் நியமனங்கள் பெறுவது தொடர்பாக,

கிழக்கு மாகாணத்தின் முதல்மகன் என்ற வகையில் நீங்கள் தற்போது ஆசிரியகலாசாலையில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட டிப்ளோமா பட்டதாரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மேற்கொள்ளும் வெற்றிகரமான நடவடிக்கையினை கிழக்கு சமூகம்; என்ற வகையில் எங்களது பாராட்டுக்கடையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இது போன்ற முயற்சிகளின் மூலம் எமது சமூகத்தின் கல்வி,கலாச்சார மற்றும் பாரம்பரியங்களை சிறப்பாக எடுத்து செல்கின்றீர்கள் என்பதனையும் உணரமுடிகின்றது. இவ்வாறான முயற்சிகளை சிறப்பாக மேலும் வெற்றி அடையச் செய்வதற்காக தங்களுக்கு நீணட ஆயுளையும், தேகாரோக்கியத்தையும் வல்ல இறைவன் தந்தருள்வதற்காக பிராத்திக்கிறோம்.

தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துவதாவது, நாங்கள் 22.01.2014ஆம் திகதியில் இருந்து சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

நாங்கள் இந்நிலமையில் பின்வரும் பிரச்சினைகளையும், இன்னல்களையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

  • கிழக்கு மாகாணத்தோடு ஒப்பிடும் போது இங்கு காலநிலை முற்றுமுழுதாக வேறுபட்டிருப்பதனால் நாங்கள் அடிக்கடி நோய்களுக்க உள்ளாகின்றோம்.
  • 400 முஆ க்கும் மேற்பட்ட பிரதான போக்குவரத்தும், கஸ்டப்பிரதேச தோட்டப் பாடசாலைகளுக்கு செல்வதற்கான குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து வசதியின்மை காரணமாகவும் ஏற்படும் அதிகமான செலவீனங்கள்
  • திருமணம் முடித்த ஆசிரியர்கள் தங்களது மனைவி,பிள்ளைகளை இப்பிரதேசங்களில் தனிமையில் விட்டு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையும்,உதவிகள் இல்லாத நிலையும்.
  • அவ்வாறான நிலையில் மனைவி,பிள்ளைகளை மாதம் ஒருமுறை வீடு சென்று பார்த்து வருகின்ற போது ஏற்படுகின்ற பிள்ளைகளின் அவலநிலை
  • திருமணம் முடிக்காத திருமண வயதைத்தாண்டிய பெண் ஆசிரியைகளின் போக்குவரத்தில் ஏற்படுகின்ற தனிமை நிலையும் அசௌகரீகங்களும்,இவர்களது வாழ்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழலும் மற்றும் இங்கிருந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையும்.
  •  இரட்டை செலவுகளினூடான கடன் சுமைகள்; மற்றும் குடும்பத்தையும் வயதான தாய், தந்தையையும், உடன் பிறப்புகளையும் பராமரிக்க முடியாத அவல நிலை.
  • முஸ்லிம் ஆசிரியர்கள் பாடசாலை விட்டு ஜூம்மா தினங்களில் வீடு செல்ல முயற்சிக்கும் போது போக்குவரத்தின் காரணமாக ஜும்மா தொழுகை பாதிக்கபடுகின்றது. இதன் நிமிர்த்தம் சனி இரவு வீடு சென்று ஞாயிறு காலை வேளையில் மீண்டும் கடமைக்காக வருகின்ற வேளையில் ஏற்படுகின்ற மன உளைச்சல் எங்களை மன நோயாளிகளாக மாற்றக் கூடிய நிலை.
  • பாடசாலை சூழலில் எதிர்நோக்குகின்ற பிரதேசவாதமும், அதனூடான நிருவாக அழுத்தங்களும்.
  • உணவு,உறையுள்,கலாச்சாரம் என்பவற்றில் ஏற்படுகின்ற பிரச்சினை.
  •  பாடசாலைகளில் தங்குமிட வசதியின்மையும்,அவ்வாறு காணப்படுகின்ற பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு வதிவிடம் மறுக்கப்பட்டு அன்டிய பிரதேசத்தில் உள்ள ஆசிரியர்கள்,அதிபர்;கள் வசிக்கின்ற நிலமை.
  • வர்த்தகம், கலைப்பிரிவில் பட்டம், முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் தரம் 5க்கு கீழ் பட்ட பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் கீழ்உழைப்புக்கும், மனஉளைச்சலுக்கும் உட்பட்டுள்ளமை. 
  •  அதிகூடிய கஸ்ட நிலவரத்தின் காரணமாக நியமனம் பெற்றவர்களில் 65மூ மானவர்கள் வேலையை இராஜனமா செய்துள்ளனர். ஆனாலும் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டவர்கள் குடும்பத்தின் ஜுவனோபாயத்துக்காக இன்னும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் இங்கு வேலை செய்கின்றனர்.
  • இதறக்கு மேலதிகமாக 2011.08.01 தொடக்கம் தொடர்ந்து 3 வருடங்கள் எதுவித வருமானமும் அற்ற நிலையில் வேயைற்ற பட்டதாரிகளாக இருந்துள்ளோம்.
  • மேலும் 30.11.2013 ஆம் திகதி கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியயோகத்தர்கள் சேவையில் தரம் 111 க்கான போட்டி பரீட்சையில் அனேகர் சித்தியடைந்திருந்தும் 13.03.2014ம் திகதி நேர்முக பரீட்சைக்கு அழைத்திருந்த போதும் வேலையற்ற பட்டதாரி என்பதனை உறுதிப்படுத்திய சான்றிதழ் கிராம உத்தியோத்தர்கள் தர மறுத்தமையினால் நேர்முகபரீட்சைக்கு எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை அல்லது கலந்து கொண்டும் எங்களுக்கான நியமன கடிதம் வழங்கப்படவில்லை இருப்பினும் கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியயோகத்தர்கள் சேவையில் தரம் 111 க்கான போட்டி பரீட்சை நடைபெற்று 2மாதங்கள் அளவில் நாங்கள் வேலையற்ற பட்டதாரிகளாகவே இருந்துள்ளோம்.
இவைகளின் நிமிர்த்தமாக திருமணம்; முடிக்காத, முடித்த ஆண்,பெண் பட்டதாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்காக இங்கு வந்து கடன் சுமைகளோடும் மன உளைச்சளோடும் மட்டுமே இங்கு பணி மேற்கொள்கின்றோம்

ஐயா,

இன்று சப்ரகமுவ பாடசாலைகளுக்கு புதிதாக 3000 உதவி ஆசிரியர்கள் வழங்கப்பட்டுள்ளனர்

அத்தோடு,

கிழக்கு மாகாணத்தில் 1500 க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அகற்காக தாங்கள் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.

எனவே,
ஆசிரியர் சேவையில் 18 மாதங்களுக்கு மேலாக வெளிமாகாணத்தில் வேலை செய்வதனை கவனத்தில் கொண்டு 

1. இம்மாகாணத்தில் இருந்து இடமாற்ற பரிந்துரை அத்துடன்
2. கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப புதிய நியமனங்கள் வழங்கும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்குதல்.
3. கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி நியனங்கள் வழங்கப்படும் போது கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் என்றில்லாம் 'கிழக்கு மாகாணத்தில் வேலைசெய்கின்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது' விளம்பரபடுத்தல்கள் செய்யுமாறு தாழ்மையோடு வேண்டுகின்றோம்.
எங்களின் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் அதிசிறந்த தீர்வொன்றை பெற்று தருவீர்கள் என்கின்ற நம்பிக்கை எமக்குள்ளது.
நன்றி.
இங்ஙனம்,


............................................. ..........................................
தலைவர் (செயலாளர்)
M.A.M..றினோஸ்  B.B.A(SEUSL),HDAFM (Merit)   


பிரதிகள்.


1. கௌரவI.M.Mமன்சூர் (சுகாதார அமைச்சர்) MPC     - தகவலுக்காக
2. கௌவர தன்டாயுதபாணி (கல்வி அமைச்சர்) MPC     - தகவலுக்காக
3. கௌரவ A.L.தவம் MPC     - தகவலுக்காக
4. கௌரவ A.L.ஆரீப் சம்சுடீன் MPC     - தகவலுக்காக
5. கௌரவ A. ஜமீல் MPC     - தகவலுக்காக
6. கௌரவ A.L.M.ஆ.நஸீர் MPC     - தகவலுக்காக
7. கௌரவ உதுமாலெவ்வை (முன்னால் அமைச்சர்)MPC     - தகவலுக்காக
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -