எஸ்.சிவகாந்தன்-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் (1000) ரூபா சம்பள கோரிக்கையை முன்வைத்து பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் அதன் பொதுச்செயலாளரும் ஊவா மாகாண அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை மாவட்டத்தில் பல்வேறு தோட்டங்களிலும் (2015.06.07) கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைப்பெற்றன.
இப்போராட்டங்களில் தொழிற்சங்க கட்சி பேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழில் கடமையின் போதே ஈடுபட்டிருந்தனர். இவ்வகையில் பதுளை பகுதியின் குயின்ஸ்டவுன் செரண்டிப் ஆகிய தோட்டங்களில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களை படங்களில் காணலாம்.(ந)




