சவூதிக்கு ISIS அச்சுறுத்தல்!

நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள மற்றுமொரு ஷைட்டி முஸ்லிம்களின் மசூதி ஒன்றின் மீது நடத்தப் பட்ட 2 ஆவது தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ள ISIS, ஷைட்டிக்களைக் குறி வைத்து சவுதியில் இன்னமும் தாக்குதல் தொடரும் என ஆடியோ செய்தி மூலம் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நண்பகல் பஹ்ரெயினில் இருந்து 70 Km தொலைவிலுள்ள கடற்கரை நகரமான டம்மாம் இல் அமைந்துள்ள இமாம் ஹுஸ்ஸைன் மசூதிக்கு வெளியே தான் இந்த 2 ஆவது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

சவுதியின் குடாய்ஹ் கிராமத்தில் அமைந்திருந்த முதலாவது மசூதி மீதான தாக்குதல் மேற்கொள்ளப் பட்டு 7 நாட்களுக்குள் நடத்தப் பட்ட இந்த 2 ஆவது தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் சவுதியில் தமது தாக்குதல்கள் தொடர்பில் ISIS விடுத்த ஆடியோ செய்தியில் அங்கு வாழ்ந்து வரும் ரவாஃபெட் என்ற ஷைட்டிக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களைத் தமது எதிரிகளாகப் பாவித்துக் கொலை செய்யுமாறு தமது வீரர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. 

ISIS இன் இந்த பிரார்த்தனை செய்யும் பொது இடங்களில் நிகழ்த்தப் பட்டுள்ள கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க அரசு இது போன்ற தீவிரக் கொள்கைகளைக் கொண்டுள்ள அனைத்துத் தீவிரவாதிகளையும் எதிர்த்துப் போராட சவுதி அரேபியாவுடன் தாம் இணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த தற்கொலைத் தாக்குதலில் கொல்லப் பட்ட ஒரு நபர் விச்சிட்டா மாநில பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் படித்து வந்த 22 வயதுடைய இளங்கலைப் பட்டதாரி மாணவர் என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

இதேவேளை ISIS போராளிகள் லிபியாவின் துறைமுக நகரமான சிர்ட்டேவிலுள்ள அல் கர்டபியா என்ற விமான நிலையத்தைக் கைப்பற்றி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சில வருடங்களுக்கு முன் கொல்லப் பட்ட லிபிய முன்னால் அதிபர் முஹம்மர் கடாஃபியின் சொந்த நகரான சிர்ட்டேவின் பல பகுதிகளைக் கடந்த வாரம் தான் ISIS கைப்பற்றியிருந்தது. சிர்ட்டே லிபியத் தலைநகர் ட்ரிப்போலியில் இருந்து தென் கிழக்கே 440 Km தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -