காத்தான்குடியில் நாளை 'மஸ்ஜிதுர் ரஹ்மா' புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-

காத்தான்குடியில் நாளை 'மஸ்ஜிதுர் ரஹ்மா' புதிய பள்ளிவாசல் திறப்புவிழாகாத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'மஸ்ஜிதுர் றஹ்மா' பள்ளிவாசல் நாளை (31.05.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கப்படும் என அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்போது பிரதம அதிதியாக துருக்கி பின் ஜாபிர்அல் கிதாமி அல் உதைமி அவர்களும், விஷேட அதிதியாக அல்ஹாஜ் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்சூரி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதுடன் உள்ளுர் உலமாக்கள், பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இப்பள்ளிவாசல் நிர்மானத்திற்கான முழுமையான அனுசரணையை அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனையைச் சேர்ந்த ஜம்இய்யதுல் சஹ்வா அல் கைரிய்யா நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -