ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.
லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் பண்டு பண்டாரநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஹேமால் குணசேகர ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் சந்திரிசிறி சூரியாராச்சி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்தவகையில்..
- லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன - பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
- பண்டு பண்டாரநாயக்க - அரச நிர்வாக, ஜனநாயக ஆட்சி இராஜாங்க அமைச்சர்
- ரஞ்சித் சியம்பலாபிட்டிய - சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர்
- ஹேமால் குணசேகர - வீடமைப்பு மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர்
- சந்திரிசிறி சூரியாராச்சி - காணி பிரதி அமைச்சர்
