முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எவ்வித நோய்களும் கிடையாது என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி உத்பல ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவின் உடல் நலக்குறைவு தொடர்பில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு குறிப்பிட்டு கூறும் அளவிற்கு நோய்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பியூலன்ஸ் வண்டியில் நீதிமன்றிற்கு ஆஜராகிய பசில் ராஜபக்ஷ, அம்பியூலன்ஸ் வண்டியை விட்டு இறங்காதிருந்தார்.இதனால் பசில் ராஜபக்ஷவை, நீதவான் ஹேமபால சென்று பார்வையிட்டிருந்தார்.
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.sa
