சிறுபான்மைகளின் தயவினால்தான் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பெரும்பான்மை கட்சிகள் விடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் அரங்கேற்றமே தேர்தல் முறை மாற்றமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் றிஸாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் முயற்சியால் அம்பாரை மாவட்டத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையத் திறப்பு விழா கடந்த வாரம் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நடைபெற்றது. சாய்ந்தமருதில் நடைபெற்ற பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அங்கு உரையாற்றும்போது மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களுக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவின் அரசு பிழையான நடவடிக்கையினுடாக உடனடி ஆபத்து இருந்தது. அதனை மாற்ற வேண்டுமென்று நாம் அப்போது கூறி அதில் வெற்றியும் கண்டோம். ஆனால் இப்போது அதற்குப் பிறகுதான் முஸ்லிம்களுக்கான, சிறுபான்மைகளுக்கான உண்மையான அரசியல் போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றது என்று நாம் அப்போதே கூறியிருந்தோம். அது நடைபெற ஆரம்பித்திருக்கின்றது.
ஜனாதிபதி ஆட்சி முறையில் பாதி மாற்றப்பட்டு விட்டது. இப்போது பொதுத்தேர்தலில் மாற்றம் கொண்டுவர எத்தணிக்கப்படுகின்றது. இதனுாடாக இரண்டு வகையான ஆபத்துக்கள் சிறுபான்மைகளுக்கு இருக்கின்றது. அதில் பிரதானமாக முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. முதலாவது எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் (பங்கு) இவர்கள் முன்வைக்கின்ற முறைகளில் கிடைக்காது.
இரண்டாவது இரண்டு பெரிய கட்சிகளுள் ஏதாவது ஒரு கட்சி சுயமாக அறுதிப் பெரும்பான்மை அல்லது அதைவிடக் கூடுதலாக பெறக் கூடிய தேர்தல் முறையைத்தான் இப்போது அவர்கள் மாற்றத்தினுாடாக கொண்டுவர இருக்கின்றார்கள். கடைசியாக இவர்கள் கொண்டு வந்திருக்கின்ற பிரேரணை 255 ஆசனங்களை பெறுவது, 165 தொகுதிகளிலும் மீதி 90 ஆகும். 30 தேசியப்பட்டியல் 60 மாவட்ட விகிதாசாரம், இவ்வாறு குறிப்பிடுவது என்னவென்று பலருக்கு தெரியாது. இவ்வாறான நிலை கொண்டுவரப்பட்டால் யாருக்கு நன்மை, யாருக்கு பாதிப்பு என்ற பல கேள்விகள் எழுகின்றது. ஆனால் உண்மையில் அரசியலில் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகள் பலருக்கு இந்த புதிர் விளங்காமல் உள்ளது. இதனால் இவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். இதன் ஆபத்தை விளங்கி அதற்காக செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை அரசியல் தலைவர்களின் கைகளில் இருக்கின்றது.
ஜனாதிபதி ஆட்சிமுறை வேண்டும் அதற்கான காரணம் சிறுபான்மைகளுக்கும் சிறந்த கௌரவம் இங்கு காணப்படுகின்றது. ஆனால் அதிகாரங்களை குறைப்பதற்கு நாம் எதிரானவர்களில்லை. அதனை குறைத்து ஜனநாயக ஆட்சியும், ஜனாதிபதி பாராளுமன்றுக்கு பொறுப்புக் கூறும் நிலையும் உருவாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஜனாதிபதி ஆட்சி முறை மாற்றம் ஏற்படலாகாது. ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றிவிட்டால் அதன் பிற்பாடு வருகின்ற பொதுத் தேர்தல் முறை தற்போதுள்ள முறையாக வராது. அதனுாடாக அறுதிப்பெரும்பான்மையை சொந்தமாக பிரதான ஒரு கட்சி பெறுவதற்கான முஸ்தீபுகளே இங்கு நடக்கிறது. இதனை எப்படியாவது பெறவேண்டுமென பிரதான கட்சிகள் துடிப்பது சிறுபான்மைகளின் தயவில்லாமல் சுயமாக அறுதிப்பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைப்பதாகும். இதற்கு வழியமைக்க சிறுபான்மைகள் ஒத்துழைப்பு வழங்க முடியாது.
எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சிறுபான்மைகளின் அரசியல் பிரதிநிதிகள் சிறந்த முடிவினை எடுப்பதற்காள உடனடியாக களத்தில் இறங்க வேண்டுமென்ற அழைப்பினை நாம் விடுக்கின்றோம்.
கடந்த 19 வருடகாலமாக மாற்ற முடியாமலிருந்த ஆட்சியை முஸ்லிம்கள் பிரதானமாகவும், சிறுபான்மைகள்பொதுவாகவும் இருந்து ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர். என்றால் அதற்கான காரணம்ஜனாதிபதி ஆட்சி முறை இந்த நாட்டில் இருந்ததனால்தான் அது சாத்தியமானது. ஜனாதிபதியாக வருகின்றவர்50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும். இந்த நாட்டில் சிங்கள மக்கள் சுமார் 70 வீதம்இருக்கின்றார்கள். சிறுபான்மைகள் அன்னளவாக சுமார் 30 வீதம் இருக்கின்றார்கள். 50 வீதத்தைப் பெறவேண்டுமாக இருந்தால் சிறுபான்மை மக்கள் 70 வீதத்திற்குள் 50 வீதம் ஒற்றுமைப்படுவது என்பது கணிதரீதியாக சாத்தியமானாலும் நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று, அதுதான் வரலாறு. எனவே அந்த அடிப்படையில் சிறுபான்மைகளின் வாக்குகள் அங்கு தேவைப்படுகின்றது. இந்த முறையில் கூட கிட்டத்தட்ட 50 வீதத்திற்கு சற்று குறைவான சிங்கள மக்கள மஹிந்தவுக்குத்தான் வாக்களித்தார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் அன்னளவாக சுமார் 30 வீதம் ஒற்றுமைப்பட்டார்கள். எனவே பெரும்பான்மை மக்களும் 22 வீதம் ஒற்றுமைப்பட்டபொழுது ஆட்சி மாற்றத்தை செய்யக்கூடியதாக இருந்தது.
இப்பொழுது அந்த ஜனாதிபதி ஆட்சி முறை அதிகாரத்தின் பாதியை எடுத்துவிட்டார்கள். உயர் நீதிமன்றம் தலையிடாவிட்டால் முழுமையாகவே எடுபட்டிருக்கும். பொதுத்தேர்தலுக்குப்பின்னர் அதனையும் நீக்கிவிட வேண்டும் என்பதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது.
மறு புறத்தில் பொதுத் தேர்தல் முறைமை இப்பொழுது இருக்கின்ற பொதுத் தேர்தல் முறைமை சிறுபான்மைகளுக்கு சாதகமான முறைமையாகும். இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது 1978 ஆம் ஆண்டின் புதிய அரசியல் யாப்பினுாடாகவாகும். இதனுாடாக 1989 ஆம் ஆண்டே இந்த யாப்பின்படி முதல் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் இன்றுவரை 6 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த தேர்தல்களில் 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 125 ஆசனங்கள் கிடைத்தன. அத்தேர்தல் மிக ஊழல் நிறைந்த தேர்தல் என்று கூறப்பட்டது. 2010 ஆம் ஆண்டு யுத்த வெற்றி அலை வீசியது, அப்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாத்திரம் 109 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களைப் பெற்றது.
இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற 4 தேர்தல்களும் சாதாரண சூழ்நிலையில் நடைபெற்றதாகும். இவை 4 இலும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி அமைத்தார். மறைந்த தலைவர் அஷ்ரபின் தலைமையில் இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்தான ஆட்சியமைக்க முடிந்தது. சொந்தமாக அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு மீண்டும் சந்திரிகா ஆட்சியமைத்ததும் மு.கா. வின் தயவிலேயே. 2001 ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சியை கவிழ்த்து ஸ்ரீ.ல.மு.கா. ரணில் விக்ரம சிங்கவின் ஆட்சியை கொண்டுவந்தார்கள். அப்பொழுதும் ஐ.தே.க. விற்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் மு.கா வின் தயவில் ஆட்சி அமைத்தார்கள். 2004 ஆம் ஆண்டு சந்திரிகா அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அப்பொழுதும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 6 ஆசனங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் நாம் மு.கா. விலிருந்து விலகி சந்திரிகாவோடு சேர்ந்து ஆட்சியமைக்க உதவினோம். உண்மையில் அதற்குப் பின்னால் பாரிய நியாயங்கள் இருந்தன. இவ்வாறான நிலையில் சாதாரண ஒரு சூழ்நிலையில் ஒரு ஜனநாயக தேர்தல் நடைபெற்றால் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது.
எனவே இப்போதைய தேர்தல் முறையில் சிறுபான்மைகளின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைக்க முடியாது. ஜனாதிபதி ஆட்சி முறையில் சிறுபான்மைகளின் ஆதவில்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாது. முஸ்லிம்களுக்கு எவ்வளவோ அநியாயம் செய்து தோற்றதற்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஸவிற்கு இப்போது கண்கள் திறந்திருக்கின்றன. அவரே இன்று பொது பல சேனா என்ற அமைப்பை குற்றம் சாட்டுகின்ற அளவு ஞானம் பிறந்திருக்கின்றது. எனவே முஸ்லிம்களை துாக்கி வீசிய இனவாத ஆட்சியாளர்களுக்கே இப்போது புரிகின்றது சிறுபான்மைகளின் தயவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்பது,
இப்போது முஸ்லிம்களின் மனதை வெல்வதற்கான முயற்சிகளில் இனவாத ஆட்சியாளர்கள் களமிறங்கி மஹிந்தவின் உள்ளுராட்சி மன்ற ஆதரவுக் குழுக்களை வைத்தே இனவாத அமைப்புக்களுக்கு ஏசப்படுகின்றது. இது முஸ்லிம்களின் மீது கொண்ட அன்பினால் நடைபெறவில்லை மாறாக இப்போதிருக்கின்ற தேர்தல் முறையில் சிறுபான்மைகளின் தயவு தேவப்படுவதனாலாகும். இப்போது அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்த 50 வீதத்திற்கு மேற்பட்ட அதிகாரம் பிரதமருக்கு போய்விட்டது. அடுத்த பொதுத் தேர்தலுக்குப்பிறகு மீதியையும் மாற்றுவது என்பது ஐ.தே.கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டார். ச
%2Bcopy.jpg)