தனது குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் 18 பில்லியன் சொத்து இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீரவின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இன்று (08) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கோ தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்களுக்கோ வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய கணக்கோ நிறுவனங்களில் இரகசிய முதலீடுகளோ இல்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர உறுதியற்று இவ்வாறு கருத்து வெளியிடுவதால் சர்வதேச ஊடகங்களிலும் அது செய்தியாக்கப்பட்டு தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.ச