தேசியக் கொடி மாற்றப்பட்ட சம்பவத்திற்கு கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

அஸ்லம் எஸ்.மௌலானா-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சிறு­பான்மையினரை பிர­தி­ப­லிக்கும் பகுதிகள் அகற்றப்பட்டு- தனியொரு இனத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தும் வகையிலான தேசி­யக்­ கொ­டி­களை சில எம்.பி.க்கள் ஏந்­தி­ய சம்­ப­வத்­திற்கு கல்­முனை மாந­கர சபையில் கண்­ட­னத்­ தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

கல்­முனை மாந­கர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரி­யப்பர் தலை­மையில் நடை­பெற்­ற போதே இக்கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கான பிரே­ர­ணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஏ.ஆர்.அமீர் முன்­மொ­ழிந்து உரையாற்றுகையில்;

"தேசி­யக்­கொ­டியை மாற்­றி­ய­மைத்தல் நாட்டின் இறை­மையை பாதிக்கும் செயல் மட்­டு­மன்றி சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இழைக்­கப்­பட்ட பெரும் அநீ­தி­யாகும். பொறுப்பு வாய்ந்­த­வர்­களே இக்­கொ­டியை ஏந்­தி­யி­ருந்­தமை வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கது. 

நாட்டில் திட்­ட­மிட்­ட­வாறு சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமிழ், முஸ்லிம் மக்­களை ஓரங் கட்டும் நட­வ­டிக்­கைகள் சில சக்­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதன் ஓர் வெளிப்­பாடே தேசி­யக்­கொடி மாற்ற விவ­கா­ர­மாகும். இந்த விடயம் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் அந்­தஸ்து மற்றும் இருப்பை பாதித்­துள்­ளது.

நாகரிக­மற்ற மூர்க்­கத்­த­ன­மான இச்­செ­யற்­பாட்டை மேற்கொண்ட­வர்­க­ளுக்கு எதி­ராக காத்­தி­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டு­மெ­ன இந்த சபை அரசாங்கத்தை கோர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிர­தி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத் உரை­யாற்­று­கையில்;

“ஒரே தேசம் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மாயையை முன்­வைத்­த­வர்­களின் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கெ­தி­ரான சதி முயற்­சியே தேசி­யக்­கொடி மாற்ற விட­ய­மாகும். பௌத்த பேரி­ன­வாத சிங்­கள அடிப்­ப­டை­வா­திகள் அதன் பின்­ன­ணி­யி­லுள்­ளனர். 

இன்­றைய நல்­லாட்­சியை முன்­னெ­டுக்கும் அர­சைப் ­ப­ல­வீ­னப்­ப­டுத்தும் உள் நோக்­கத்­து­ட­னேயே இச்­செ­யற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒன்­பது வருட மஹிந்த ஆட்சியில் சிறு­பான்மைச் சமூ­கங்கள் உரி­மைகள் இழந்து அரக்க ஆட்­சி­யினால் நசுக்­கப்­பட்டு துய­ருற்­றி­ருந்த நிலையில் தொட­ராக மீண்டும் சிறு­பான்மைச் சமூ­கங்­களை காலில் போட்டு மிதிப்­ப­தற்கு பௌத்த பேரி­ன­வா­தமும் பிற்­போக்கு சக்­தி­களும் முயற்­சித்து வரு­கின்­றன" என்றார்.

இப்பிரேரணை மீது மற்றும் சில உறுப்பினர்களும் ஆக்ரோசமாக உரையாற்றினர்.

முதல்வர் நிஸாம் காரி­யப்பர் பிரேரணையை நிறைவு செய்து உரை­யாற்­று­கையில்;

"அர­சி­ய­ல­மைப்பின் ஆறா­வது சரத்து தேசி­யக் ­கொடி தொடர்­பாக மிகத்­தெ­ளி­வாகக் குறிப்­பி­டு­கின்­றது. எனவே தேசி­யக் ­கொ­டியை வேறு ­வி­த­மாக பயன்­ப­டுத்­து­வதோ அதில் மாற்­றங்கள் செய்­வதோ தண்டனைக்குரிய குற்­ற­மாகும். 

இந்த நாட்டில் சிறு­பான்­மை­யி­னங்­க­ளான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் நாட்டின் பங்­கா­ளிகள் அல்­ல­வென காட்டும் நோக்கிலேயே மாற்­றப்­பட்ட தேசியக்கொடி ஏந்தப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இது தொடர்பான விசாரணையின் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கப்படுமென எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன், தீர்மானத்தின் பிரதிகளை பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு சபை செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -